தமிழ் மாடல் என்று சொல்ல வேண்டியதுதானே: எதற்கு திராவிட மாடல்? – பேரரசு  கேள்வி!

தமிழ் மாடல் என்று சொல்ல வேண்டியதுதானே: எதற்கு திராவிட மாடல்? – பேரரசு கேள்வி!

Share it if you like it

தமிழ்நாடு மாடல் அல்லது தமிழ் மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொன்ன போது ஏன் தமிழா இந்த கோபம் வரவில்லை? என பிரபல திரைப்பட இயக்குனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அம்மாநில அரசும் மத்திய அரசு மிகச் சிறப்பாக நடத்தி இருந்தது. ஜாதி, மதம், மொழி, இனம், கடந்து தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், கலந்து கொண்ட தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வெகுவாக பாராட்டி இருந்தார்.

இதையடுத்து, அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுவும் மிக குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். இதில் அனைவரும் அங்கம். பாரதம் என்பது ரிஷிகள், ஆன்மீக இலக்கியங்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் பாரதம் குறித்து யாரும் பேசுவது இல்லை.

நமது பாரத தேசத்தை பிளவுபடுத்த, அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும்.

இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் சிலர் அமெரிக்காவை போல பல தேசங்கள் இணைந்த நாடாக கருதுகின்றனர். அது தவறு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.

தமிழக ஆளுநரின் பேச்சு தி.மு.க.வில் பெரும் புயலை கிளப்பி இருந்தது. இதையடுத்து, தி.மு.க.வின் அடிமை ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் சீப்பு போன்ற நெறியாளர்கள் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்தனர். நாங்கள் தமிழ்நாடு என்றுதான் அழைப்போம். தமிழகம், என்று சொல்ல மாட்டோம் என கூறியிருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வருகின்ற கோபம், தமிழ்நாட்டை திராவிடநாடு என்றபோது, தமிழனை திராவிடன் என்றபோது, நம் தமிழக முதல்வர் தமிழ்நாடு மாடல் அல்லது தமிழ் மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொன்ன போது ஏன் தமிழா இந்த கோபம் வரவில்லை?

சங்கி : இது தமிழ்நாடு உபி : இல்ல இல்ல இது திராவிட நாடு கவர்னர் : இது தமிழகம் உபி : அய்யய்யோ ….இது தமிழ்நாடு சங்கி : அப்படி வாங்கடா வழிக்கு


Share it if you like it