மலரை தூவ சொல்லி தட்டை நீட்டினால் ஆற்றில் வீசி எறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமாக இருப்பவர் ஸ்டாலின். சமீப காலமாக இவர் நடந்து கொள்ளும் விதமும், பேசும் விதமும் பொதுமக்கள் மத்தியில் பெரிய குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், கோவை மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
இதையடுத்து, சென்னையில் வாக்களித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது தமிழக முதல்வர் கூறியதாவது; ஏற்கனவே உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த வேலுமணி அவர்கள் தலைமையில் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்று உளறி கொட்டி இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து பல மாதங்களை கடந்து விட்ட நிலையிலும் கூட தான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இவர் பேசி வருகிறாரே என பொதுமக்கள் அந்நாட்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அணையில் இருந்து வெளியேறிய நீருக்கு அனைவரும் மலர் தூவினர். இதையடுத்து, முதல்வரிடம் மலரை தூவ வேண்டி தட்டை நீட்டினார்கள். அதுவரை மலரை எடுத்து தூவிய முதல்வர் ஒரு கட்டத்தில், அந்த தட்டையே ஆற்றில் வீசி எறிந்த சம்பவம் பொதுமக்கள் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் கனவில் இருக்கும் இவரிடம் நாட்டை கொடுத்தால் நாட்டையே தூக்கி எறிந்து விடுவார் என இணையதளவாசிகள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.