பேனா சின்னம் வந்தால்… மீன் உற்பத்தி பெருகும்… உ.பி.யின் புது கண்டுபிடிப்பு!

பேனா சின்னம் வந்தால்… மீன் உற்பத்தி பெருகும்… உ.பி.யின் புது கண்டுபிடிப்பு!

Share it if you like it

சென்னை மெரினாவில் பேனா சின்னம் அமைத்தால் மீன் இன பெருக்கம் அதிகரிக்கும் என கழக கண்மணி ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக, சென்னை மெரினா கடலுக்குள் ரூ. 80 கோடியில் பேனா சின்னம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஸ்டாலின் அரசு வீணடிப்பதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், என பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக்கேட்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், மீனவ அமைப்புகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். காலை 10:30 மணிக்கு தொடங்கிய கூட்டம், மதியம் 1:30 வரை நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் மீனவர் பிரிவு தலைவருமான எம்.சி.முனுசாமி இவ்வாறு பேசினார் ; திருவள்ளுவர் சிலையை விட கருணாநிதிக்கு ஏன்? உயரமான சிலை அமைக்க வேண்டும். அவரை, விட கருணாநிதி உயர்ந்தவரா? பேனா சின்னம் அமைப்பது மீனவர் நலனிற்கு எதிரானது என ஆவேசமாக கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது பேனா சின்னம் அமைத்தால் அதனை நான் உடைப்பேன் என பேசியிருந்தார். இப்படியாக, ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், கழக கண்மணி ஒருவர் பேசும் போது, பேனா வைத்தால் பாறைகள் உருவாகும். பாறைகள் இருந்தால் பாசிகள் படரும். பாசிகள் படர்ந்தால் மீன்கள் வரும். அந்த மீன்களை மீனவன் பிடிப்பான். ஆகவே, பேனா சின்னம் அவசியம் என தனது தரப்பு கருத்தை கழக உடன் பிறப்பு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it