முதல்வரை சந்திக்க சென்ற பெண்மணியை காவல்துறையினர் தள்ளி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்பொழுது, தனது இரு குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க பெண்மணி ஒருவர் முயன்றுள்ளார். அப்பொழுது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை தள்ளி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அப்பெண்மணி கூறியதாதவது; என் கணவர் இறந்து விட்டார், அப்பா இல்லை. அண்ணன் தம்பி யாரும் இல்லை. எனக்கு ஒரே ஒரு தங்கை மட்டும் தான் உண்டு. எங்களுக்கு வருமானம் இல்லை. வாழ்வதற்கு வேற வழியில்லை என்று உருக்கமுடன் பேசியிருந்தார். உங்களை பார்க்க அனுமதி கொடுத்தார்களா? என அப்பெண்மணியை பேட்டி கண்டவர் கேட்க அருகில் இருந்த பெண்மணி ஒருவர் எங்களை தள்ளி விட்டு சென்று விட்டார்கள் என கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இது குறித்தான காணொளியை தமிழக பா.ஜ.க ஐடி மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
அதன் லிங்க் இதோ.