தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. ஆட்சியில் கவுன்சிலர்களின் அட்டூழியங்கள், அடாவடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, பெண் கவுன்சிலர்களின் கணவர்களின் அட்ராசிட்டிக்கு ஒரே அளவே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு, பல்வேறு அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கவுன்சிலர்களின் செயல்பாடுகளை கண்டு பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி அரங்கேற்றிய வெறிச்செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து, தினமலர் பத்திரிகையில் வெளி வந்த செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி, 50, தி.மு.க.வைச் சேர்ந்த இவர், நாகோஜனஹள்ளி பேரூராட்சி, ஒன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், 33, அவரது தம்பி பிரபு 29, ஆகியோர் ராணுவ வீரர்கள். பிரபாகரன் கடந்த, 8-ம் தேதி அதே பகுதியிலுள்ள சின்டெக்ஸ் தொட்டி அருகே துணி துவைத்துள்ளார்.
இதை சின்னசாமி கண்டித்ததால் வாய்த்தகராறு ஏற்பட்டது. அன்று மாலை, சின்னசாமி 10-க்கும் மேற்பட்டோருடன் சென்று பிரபாகரன், பிரபு ஆகியோரை தாக்கினார். பிரபு புகார்படி, நாகரசம்பட்டி போலீசார், கவுன்சிலர் மகன்களான ராஜபாண்டி, 30, சென்னையில் போலீசாக பணிபுரியும் குருசூரியமூர்த்தி, 27, குணநிதி 19 உறவினர்களான மணிகண்டன், 32, மாதையன், 60, வேடியப்பன்,55, உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.
ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராணுவ வீரர் பிரபு நேற்று மாலை இறந்தார். இதையடுத்து, நாகரசம்பட்டி போலீசார். இதை கொலை வழக்காக மாற்றினர். தலைமறைவாக உள்ள, கவுன்சிலர் சின்னசாமி உட்பட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
நன்றி தினமலர்..