சரக்கு பாட்டிலுக்கு ரூ.5 அதிகமாக கேட்கிறார்கள் என மதுபிரியர் ஒருவர் சாலையில் படுத்து உருண்ட காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் இன்று உலகிற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. அந்தவகையில், தமிழர்களுக்கு என்று உலகம் முழுவதும் நற்பெயர் உள்ளன. ஆனால், இந்த திராவிட ஆட்சியில் தமிழ் கலாச்சாரம் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதே கொடுமையிலும் கொடுமை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்கள் கூறியிருந்தனர். எனினும், விடியல் ஆட்சி அமைந்து 2 வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது. அதே வேளையில், பூரண மதுவிலக்கு இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை என்பதே கசப்பான உண்மை.
இப்படிப்பட்ட சூழலில், அறியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மதுபிரியர் ஒருவர் சாலையில் படுத்து கொண்டு போராட்டம் நடத்தி இருக்கிறார். அதாவது, மது பாட்டில் ரூ.5 கூடுதலாக விற்பனை செய்கிறார்கள் என்று அரசு பஸ் முன்பாக படுத்து கொண்டு விடியல் ஆட்சியிடம் நியாயம் கேட்டு இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.