பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் தமிழ் பாடத்தில் 47,000 மாணவ மாணவிகள் தோல்வியை தழுவி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஹிந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம், தமிழ் ஆங்கிலம் தவிர பிற மொழிகளுக்கு அனுமதி கிடையாது. இதுதான், திராவிட மாடல் ஆட்சி என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடை தோறும் கூறி வருகின்றார். நாளை இந்தியாவிற்கே இதுதான் வழிகாட்டி என்று தி.மு.க மூத்த தலைவர்கள் இன்று வரை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அவதூறு பரப்பும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
இப்படிபட்ட சூழலில் தான், கடந்த மே மாதம் 10 மற்றும் 12 வகுப்பு மாணவ – மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தமட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியுள்ளதாக கூறப்பட்டது. அதேபோல, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தவகையில், 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் (20.6.2022) வெளியாகி இருக்கிறது. இதில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் சுமார் 47,000 பேர் தமிழில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்விலேயே இப்படி என்றால் 12-வம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மாணவ மாணவிகள் தோல்வியடைந்து இருக்கின்றார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஆசிரியர் நியமனங்களில் லஞ்சம், ஊழல் மற்றும் தகுதியான ஆசிரியர்கள் இல்லாததே இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர். ஹிந்தி தெரியாது போடா என்று மொழி உணர்வை தூண்டி விடுகின்றனர். ஆனால், நம் கண் முன்னே தமிழ் மொழி அழிந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதுதவிர, 10 மற்றும் 12 வகுப்பு பொதுதேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் சுமார் 8 பேர் தற்கொலை செய்து கொண்டு இருக்கும் சம்பவம் தான் கொடுமையிலும் கொடுமை என்பது குறிப்பிடத்தக்கது.