ராணுவ வீரர் பிரபுவின் மரணம் தொடர்பாக தி.மு.க. முன்னாள் எம்.பி. தெரிவித்து இருக்கும் கருத்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு-28. இவர், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரை, நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருக்கும் சின்னச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொன்ற சம்பவம் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது. இதற்கு, முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. தனி மாநிலம் பற்றி பேசியது. அவர்களுக்கு, ராணுவத்தின் மீது மரியாதை கிடையாது. சீருடை அணிந்த யாருக்கும் மரியாதை கிடையாது என்பது அவர்களின் கலாசாரத்தில் உள்ளது. தி.மு.க. வெட்கக்கேடானது மற்றும் தீயது. ராணுவ வீரரை தி.மு.க. கவுன்சிலர் தாக்கியும், 6,7 நாட்களாக போலீசார் அமைதியாக இருந்துள்ளனர். ஊடகங்களில் இந்த விவகாரம் வெளிவந்த பிறகே கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டு இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமாக இருப்பவர் டி.கே.எஸ். இளங்கோவன். இவர், பிரபல ஆங்கில ஊடகமான Republic டிவிக்கு அளித்த பேட்டியில், ராணுவ வீரரின் மரணம் சின்ன பிரச்சனை என பேசியிருக்கிறார். இவரின், திமீர் தனமான பேச்சு பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.