எனது வீட்டு வாசலில் குடிக்காதே என்று கூறிய நபரை குடிகாரர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தாண்டி தற்போது இளம் பெண்கள் குடிக்க ஆரம்பித்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு உண்டு என்று கூறியவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். எனினும், இந்த ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது. ஆனால், இன்றுவரை பூரண மதுவிலக்கு அமலுக்கு வரவில்லை. அந்த வகையில், மது தொடர்பாக வரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. மூத்த தலைவரும் கரூர் மத்திய நகர் தலைவருமாக இருப்பவர் கார்த்திகேயன். இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ;
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை பகுதியில் சரவணன் (40) என்பவர் வீட்டு வாசலில், இளைஞர்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்தபோது சரவணன் அவர்களை எச்சரித்துள்ளார். கோபமடைந்த நபர்கள் சரவணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். என் வீட்டு வாசலில் குடிக்காத என்று சொன்னதற்கு கொலை.
ஐயா திராவிட மாடல் அமைச்சரே கரூர் மாநகரில் இளைஞர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டீர்கள் ?? எங்கள் கரூர் மக்கள் பாதை ஏரியா குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது. உங்கள் வயிற்றுப் பசிக்கு எங்கள் இளைஞர்கள் சாவுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.