எனது மகனை காவலர்கள் அடித்து கொன்று விட்டதாக தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்து இருக்கும் சம்பவம் தமிழக மக்களிடையே மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தொடர்ந்து லாக்கப் தொடர்பான மரணங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை சேர்ந்த மாணவர் மணிகண்டனை (வயது 21 ) காவல்துறையினர் அடித்து கொன்று விட்டதாக அவரது பெற்றோர் பகீர் குற்றச்சாட்டினை சுமத்தி இருந்தனர்.
இதனை தொடர்ந்து, சென்னனை பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த (25) விக்னேஷ். காவல்துறையினர் விசாரணையின் பொழுது மரணம் அடைந்தார். இதற்கு, முழுக்க முழுக்க காவல்துறையை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். இதையடுத்து, சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் செங்குன்றத்தை சேர்ந்த விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் சமீபத்தில் மரணம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்தவகையில், ராஜசேகர் தாயார் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரை வைப்பது போல் அமைந்து இருந்தது. இச்சம்பவத்தின், சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு துயர சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நிகழ்ந்துள்ளது. அதுகுறித்தான கூடுதல் தகவல்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க ஆட்சியில் இது போன்ற லாக்கப் மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் இருப்பது சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமடைந்து இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.