பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டோ தாங்க அதிகம் விற்பனை ஆகிறது என முதியவர் ஒருவர் பேசிய காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு அக்கட்சியின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதன்காரணமாக, தி.மு.க.வை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள் மற்றும் யூ டியூப்பர்ஸ் பா.ஜ.க குறித்து ஒரு தவறான பிரச்சாரத்தை இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், மூத்த பத்திரிக்கையாளர் மணி அண்ணாமலையை குறைத்து மதிப்பிடாதீர்கள் அவர் தெளிவான திட்டத்துடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். மற்ற பா.ஜ.க தலைவர்களை விட இவர் தீவிரமாக செயல்படுகிறார் என்று கதறியதே தக்க சான்று. இதையடுத்து, பிரபல அரசியல் விமர்சகர் ரிஷி பக்ரி தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், ரோட்டு ஓரத்தில் கட்சி கொடி, கட்சி தலைவர்களின் போட்டோ மற்றும் பேஜ் போன்றவற்றை விற்பனை செய்யும் முதியவரிடம் பிரபல இணையதள ஊடகமான கலாட்டா பேட்டி கண்டு இருக்கிறது. இதையடுத்து, அந்த முதியவர் கூறியதாவது;
அ.தி.மு.க தான் நம்பர் ஒன் அம்மா இருக்கும் வரை அதன்பிறகு, வியாபாரம் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்தது. விஜயகாந்த் படமும் நன்றாக விற்பனை ஆனது. இப்பொழுது, பிஜேபி தான் சூப்பர். அண்ணாமலை கார்ட் தான் நன்றாக விற்பனை ஆகிறது. தி.மு.க மற்றும் உதயநிதி ஸ்டாலின் கார்டு குறித்து நெறியாளர் கேள்வி ஒன்றினை முன்வைக்கிறார். அந்த கார்டு எல்லாம் இருக்கு அது எல்லாம் போகாது என்று கூறியிருக்கிறார். தற்பொழுது, இக்காணொளி தான் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக துவங்கியுள்ளது