அமைச்சர் உதயநிதி தொகுதி:   70 ஆண்டுகால கோவில் தகர்ப்பு!

அமைச்சர் உதயநிதி தொகுதி: 70 ஆண்டுகால கோவில் தகர்ப்பு!

Share it if you like it

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் 70 ஆண்டுகால கோவில் தகர்க்கப்பட்டு இருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்தான செய்தியினை, ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அவர் பதிவு இதோ ;

சென்னை சேப்பாக்கம் தொகுதி கொய்யாத் தோப்பு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக வீற்றிருந்து அருள் பாலித்து வந்த தேவி கருமாரியம்மன் கோயில் இந்து விரோத திமுக அரசால் இன்று காலை 4.30 மணியளவில் போலிஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. குடிசையில் இருந்த கோயில் 30 ஆண்டுகளுக்கு முன்

காங்.எம்.எல்.ஏ வும் முன்னாள் கேரள கவர்னருமான ஜோதி வெங்கடாசலம் அவர்கள் உதவியால் 70களில் கோபுரத்துடன் கோயில் கட்டப்பட்டது. 72 ஆண்டு கால கோயில் இடிக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.


Share it if you like it