குடிபோதையில் ரகளை செய்த பெண்மணி. கனிமொழியை தேடும் நெட்டிசன்கள்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் தி.மு.க.வின் முன்னோடிகள் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு வழங்கி இருந்தனர். அதனை நம்பி இளம்பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் ஆர்வமுடன் தி.மு.க.விற்கு வாக்களித்து இருந்தனர். இதையடுத்து, ஆட்சியில் அமர்ந்த தி.மு.க அரசு தனது உண்மையான சுயரூபத்தை மெல்ல மெல்ல காட்ட துவங்கியிருப்பதை தமிழக மக்கள் தற்பொழுது நன்கு உணர்ந்து உள்ளனர்.
அந்தவகையில், தி.மு.க. ஆட்சியில் மதுக்கடைகள் மூடப்படும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். இதுதவிர, மதுவால் தமிழக பெண்களின் வாழ்வு எந்த அளவிற்கு பாழ்பட்டு வருகிறது என்று புள்ளி விவரத்துடன் விளக்கமாக கூறியிருந்தார். ஆனால், விடியல் ஆட்சி அமைந்து ஒரு வருடத்தை கடந்து விட்டது. இருப்பினும், தி.மு.க எம்பி கனிமொழி மதுக்கடைகள் மூடுவது குறித்து இன்றுவரை ஏன்? வாய் திறக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் பலர் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், பெண்மணி ஒருவர் மதுபோதையில் நடுரோட்டில் ஆண் ஒருவரை தாக்குவதும் அவருடன் வாக்குவாதம் செய்வது போன்ற காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.