தரமற்ற சாலையில் சிக்கி கொண்ட தனியார் பேருந்து கரூர் மக்கள் அதிர்ச்சி.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அந்தவகையில், பல்வேறு சீரமைப்பு பணிகள் வேகமாக தற்பொழுது நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் போடப்பட்டு இருந்த சிமெண்ட் சாலையின் புகைப்படத்தை பார்த்து ஒட்டு மொத்த தமிழக மக்களும் எள்ளி நகையாடும் வகையில் அமைந்து இருந்தன.
இப்படிப்பட்ட சூழலில் தான், பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, கரூரில் இருந்து தான்தோன்றிமலை வரை சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த ஊழியர்கள் மேற்கொண்டு இருக்கின்றனர். அதன்ஒரு பகுதியாக தான்தோன்றிமலைக்கு உட்பட்ட ரியல் கோச் பகுதியில் சாலைகள் போடப்பட்டு இருக்கின்றன. அவசர அவசரமாக இச்சாலைகள் போடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தனியார் பேருந்து ஒன்று இச்சாலையில் சிக்கி கொண்ட சம்பவம் தான் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.