நீட் பற்றிய புரிதல் இல்லாமல் கேள்வி கேட்ட நம்பர் 1 முதல்வர்!

நீட் பற்றிய புரிதல் இல்லாமல் கேள்வி கேட்ட நம்பர் 1 முதல்வர்!

Share it if you like it

நீட் பற்றிய புரிதல் இல்லாத முதல்வரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று வரை நீட் தேர்விற்கு எதிராக மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மற்றும் பணம் படைத்த முதலைகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிக்களுக்கு நீட் தேர்வு பெரும் தடையாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அந்தவகையில், நீட் தேர்விற்கு தமிழகத்தில் இவ்வளவு எதிர்ப்பு இருந்து வருகிறது என்பதே யாரும் மறுக்க முடியாத உண்மை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர் அப்பொழுதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். இதுதவிர, கொஞ்சமாவது, வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று முந்தைய ஆளும் கட்சியான அ.தி.மு.க-வை மிக கடுமையாக விமர்சனம் செய்தவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால், தி.மு.க ஆட்சி அமைந்து ஒரு வருடத்தை கடந்து விட்ட பின்பும் கூட நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றே அதே பல்லவி மட்டும் இன்று வரை தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நீட் தேர்வு என்றால் என்ன? அது குறித்து தனக்கு எந்த அளவிற்கு புரிதல் உள்ளது என்பதற்கு இக்காணொளியே சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் லிங்க் இதோ.

Image
Image
Image

Share it if you like it