என் மீது அபாண்ட பழி… உதயநிதி ஸ்டாலின் வேதனை!

என் மீது அபாண்ட பழி… உதயநிதி ஸ்டாலின் வேதனை!

Share it if you like it

தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு’ இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் பேசியதாவது :

“கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சினிமா சார்ந்த நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கிறேன். இந்த திரைத்துறையில் 2007-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பயணித்திருக்கிறேன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் கிட்டத்தட்ட 15 வருடமாக இயங்கி கொண்டிருக்கிறது. 15 படங்களை நேரடியாக தயாரித்திருக்கிறேன். 15 படங்கள் நடித்துள்ளேன். மேலும், நல்ல படங்களை வெளியிட்டுள்ளேன். .

இப்போது கூட 3 நாட்களுக்கு முன்பு ஒருவர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறியிருக்கிறார். இங்கிருக்கும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் உண்மை என்னவென்று நன்றாகவே தெரியும். அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. ஒரு தயாரிப்பாளருக்கு மற்றொரு தயாரிப்பாளரின் கஷ்டம் தெரியும். உங்கள் எல்லோருக்கும் தெரியும் ரெட் ஜெயன்டின் மதிப்பு என்ன என்பது. போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு செல்கிறார்கள் என கூறினார்.


Share it if you like it