கட்டி முடிக்கப்பட்ட பாலம் பத்தே நாளில் இடிந்து விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. விடியல் கிடைக்கும் என்று நம்பிய மக்கள் அதன் பலனை தற்போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அனுபவித்து வருகின்றனர். இதுதவிர, மக்களின் அடிப்படைவசதிகள் பெரும்பாலும் சரியாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதனிடையே, வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து, பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனகங்கள், அடிபம்பு என கண்ணில் பட்ட அனைத்து இடத்திலும் சிமெண்டினை கொட்டி கான்ட்ராக்டர்கள் செய்த அட்டூழியத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
தமிழகம் முழுவதும் இதே நிலை என்பது பலரின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் தான், தஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரிய கூத்து ஒன்று அரங்கேறி இருக்கிறது. அதாவது, தஞ்சை மாநகராட்சி 27-வது வார்டில் அண்மையில் வடிகால் வாய்க்கால் பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இந்த, பாலம் கட்டி முடித்த பத்தே நாளில் இடிந்து விழுந்துள்ளது. இந்த, பாலத்தின் மீது 3 யூனிட் மணல் ஏற்றிச் சென்ற லாரியின் பாரம் தாங்காமல் பாலம் இடிந்து உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.