G Square -ல் செய்தி சேகரிக்க சென்ற நிருபருக்கு கும்மாங்குத்து!

G Square -ல் செய்தி சேகரிக்க சென்ற நிருபருக்கு கும்மாங்குத்து!

Share it if you like it

G Square நிறுவனத்தில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 18 நிருபரை அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணாநகர் தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் மோகன். இவரது, மகன்தான் கார்த்திக். இவர், G Square நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசனின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருப்பவர். G Square நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக ஏரளாமாக சொத்து சேர்த்து இருக்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திடுக்கிடும் தகவலை அண்மையில் கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், G Square நிறுவனம், தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன் மற்றும் கார்த்திக் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நியூஸ் 18 நிருபர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள G Square நிறுவனத்திற்கு செய்தி சேகரிக்க சென்று இருக்கிறார். இந்த நிலையில், ஊடக நிருபர், கேமரா மேன் உள்ளிட்டவர்களை அடுக்கு மாடியின் குடியிருப்பு செயலாளர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it