கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய உதயநிதி ஸ்டாலினை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.
ஏழை மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனை, கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்து இருக்கின்றன. அறிவு ஜீவிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் நடத்திய மிக நீண்ட ஆலோசனைக்கு பிறகு மத்திய அரசு நீட் தேர்வினை செயல்படுத்தி இருக்கின்றன. ஆனால், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் நீட் தேர்விற்கு இன்று வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பணம் படைத்த முதலைகள் மற்றும் பினாமி பெயரில் கல்லூரிகளை நடத்தி வருபவர்களுக்கு நீட் தேர்வு பெரும் தடையாக இருந்து வருகின்றன. எனவே, அரசியல்வாதிகள் மூலம் மருத்துவ மாஃபியாக்கள் நடத்தும் கபட நாடகமே நீட் தேர்வு எதிர்ப்பு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். இப்படிப்பட்ட சூழலில் தான், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை, உடனே ரத்து செய்வோம் என தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து இருந்தார்.
அந்த வகையில், நீட் தேர்வினை லட்சகணக்கான மாணவ, மாணவிகள் வருகிற 17. 07. 2022 அன்று எழுத இருக்கின்றனர். நீட் தேர்வை, ரத்து செய்வோம் என மாணவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றாமல் உதயநிதி ஸ்டாலின் எங்கே? ஒளிந்து கொண்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.