தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தி.மு.க.வை மிக கடுமையாக சாடியுள்ளார்.
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக்கின் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று வரை சோதனை நடத்தி வருகின்றனர். இதில், அசோக்கின் வீட்டுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் கொடூர தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் மீது வழக்குப் பதியாமல் தாக்கப்பட்ட அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வருமானவரித் துறையினர் எங்களிடம் பாதுகாப்பு கேட்டிருந்தால், உரிய பாதுகாப்பினை நாங்கள் அளித்திருப்போம் என கரூர் எஸ்.பி. கூறியிருந்தார். எஸ்.பி.யின் இந்த கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தே.மு.தி.க. கட்சியின் பொருளார் பிரேமலதா விஜயகாந்த் தமிழக காவல்துறையை மிக கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்தான, செய்தியினை நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.