தி.மு.க. கிளை ஒன்றிய செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார். இந்த, அறிவுரையைதான் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
கழகத்தினரை மகிழ்ச்சியோடு வைத்திருங்கள் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் இதனைதான் நான் வலியுறுத்துகிறேன். அதையே தான் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு பகுதி ஒன்றிய கிளை செயலாளர்கள் அவரவர்களுக்கு உரிய தொண்டர்களை, நிர்வாகிகளை கவனித்து கொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். தீர்க்க முடியாவிட்டாலும் அவரின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். அதிலே, அவர் மகிழ்ச்சி ஆகி விடுவான் என கூறியுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவுரை வானத்தைபோல திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நகைச்சுவை காட்சியை நினைவுப்படுத்துவது போல அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.