அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, செய்தி வெளியிடாமல் சன் நியூஸ் யானை தண்ணீர் குடித்த செய்தியை வெளியிட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வின் குடும்ப ஊடகமாக இருப்பது சன் நியூஸ். இதன், ஆசிரியராக இருப்பவர் குணசேகரன். இவர், பா.ஜ.க. மற்றும் ஹிந்துக்களுக்கு எதிரான செய்திகளுக்கு மட்டுமே அதிக முக்கியதுவத்தை கொடுப்பவர். உ.பி.யில் ஒரு சிறு தவறு நடந்தால் கூட உடனே அதனை செய்தியாக வெளியிட்டு பா.ஜ.க.வின் ஆட்சியை பாரீர் என அலறுவதை வழக்கமாக கொண்டவர். அதே வேளையில், விடியல் ஆட்சியில் உடன் பிறப்புகள் செய்யும் அட்டூழியங்களை மூடி மறைப்பதுதான் சன் நியூஸின் பணி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இப்படிபட்ட சூழ்நிலையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜியின் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த, செய்திகளை வெளியிடாமல் ஆந்திராவில் யானை கூட்டம் தண்ணீர் குடித்தது என்ற செய்திக்கு சன் நியூஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த செய்தியின் மூலம் தமிழக மக்களை திசை திருப்பி விடலாம் என விடியல் ஊடகம் நினைக்கிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.