அரசு மருத்துவமனையில் தி.மு.க.வினர் நம்பிக்கை இல்லையா என பா.ஜ.க. மூத்த தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலையில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது : செந்தில் பாலாஜி என்கின்ற ஒரு நபருக்காக ஒட்டு மொத்த தமிழக அரசு, தமிழக அமைச்சரவையே ஏதோ ஒரு மிகப்பெரிய பிரளயமே வந்துவிட்டது போன்ற ஒரு மாயை உருவாக்கிக் கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக இருப்பது பா.ஜ.க. தான். அதனால் பா.ஜ.க. 2026-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். அதற்குண்டான அத்தனை பணிகளையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசு பொது ஆஸ்பத்திரிகளான ஓமந்தூரார், ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிகள் போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட நல்ல டாக்டர்களை கொண்ட ஆஸ்பத்திரிகள் மேல் தி.மு.க.வினருக்கு நம்பிக்கை இல்லை என்றால், மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?. மாணவர்களுக்கு பட்டம் வழங்க காலதாமதம் ஏற்படுவதாக கூறுகிறீர்கள். இதுவரைக்கும் எந்த மாணவரும் பட்டம் வாங்கவே இல்லையா? இன்று பட்டங்கள் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. கவர்னர் மாளிகையின் குறிப்பை பாருங்கள். தவறு அரசாங்கத்திடம் இருக்கிறது. கவர்னரிடம் இல்லை.