நான் முதல்வராக இருந்திருக்கணும்; ஸ்டாலினை மீண்டும் சீண்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

நான் முதல்வராக இருந்திருக்கணும்; ஸ்டாலினை மீண்டும் சீண்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

தலைமை செயலகத்தில் வந்த அமலாக்கத்துறையை முதல்வர் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து இருக்க வேண்டும். நானாக இருந்திருந்தால் இதனை செய்து இருப்பேன் என வேல்முமுதல்வரை வேல்ருகன் மீண்டும் சீண்டியிருக்கிறார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனராக இருப்பவர் வேல்முருகன். இவர், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் வென்றவர். தி.மு.க.வின் கூட்டணியில் இருந்தாலும், விடியல் ஆட்சியில் நடக்கும் அவலங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். இதன்காரணமாக, தி.மு.க. மேலிடம் இவர் மீது கடும் உஷ்ணத்தில் இருந்து வருகிறது. இதனிடையே, ஜூனியர் விகடனுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார்ர் :

தி.மு.க. அன்று சொன்னதை இன்று மாற்றிப் பேசுவது ஏற்புடையதல்ல. எட்டுவழிச் சாலைத் திட்டம், கோவை சூயஸ் குடிநீர் திட்டம், டாஸ்மாக் கடைகள், ஆறுபேர் விடுதலை, நீட் விலக்கு, இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை எனப் பல வாக்குறுதிகளை தி.மு.க கொடுத்தது. முன்பு ஒன்று பேசிவிட்டு, தற்போது மாறுபட்ட கருத்தைச் சொல்வது ஏற்புடையதல்ல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில், மக்கள் மத்தியில் எதிர்ப்பு உண்டாகும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், தலைமைச் செயலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாப்பது ஏன்?; அதிகாரம் என்னிடம் இருந்தால் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்திருப்பேன் என கூறியுள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் தொடர்ந்து முதல்வரை சீண்டி வருவது கட்சி மேலிடத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it