அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
தி.மு.க. மூத்த தலைவரும் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர், 2006 -2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தார். அச்சமயத்தில், சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்கை ரத்து செய்யுமாறு பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில், அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது. மேலும், அமைச்சருக்கு எதிரான வழக்கை விசாரிக்கலாம் என நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைச்சர் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடியிடம் சீக்கிரம் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் தனது தொண்டையை பிடித்து கொண்டு ஏதேனும் நாடகம் ஆட வாய்ப்பு உள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும், விவரங்களுக்கு தினதந்தி டிவியில் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.