தீ குளித்து சாவேன்… தி.மு.க. நிர்வாகியின்  போஸ்டரால் பரபரப்பு!

தீ குளித்து சாவேன்… தி.மு.க. நிர்வாகியின் போஸ்டரால் பரபரப்பு!

Share it if you like it

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை வரும் 27ம் தேதிக்குள் மாற்றாவிட்டால் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளிப்பேன் என மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி நகர் முழுவதும் ஒட்டியிருக்கும் போஸ்ட்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக ஆளுநராக இருப்பவர் ஆர்.என்.ரவி. இவர், பொறுப்பேற்றது முதல் தி.மு.க. அரசுக்கும் இவருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. தி.மு.க.வின் தவறுகளை ஆளுநர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். இதன்காரணமாக, தி.மு.க. அரசு ஆளுநர் மீது கடும் கோவத்தில் இருந்து வருகிறது. கடைசியாக, செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ரவி ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால், தமிழக அரசு சிறப்பு ஆணை பிறப்பித்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அறிவித்துள்ளது. இதுதவிர, ஆளுநரிடம் மட்டுமில்லாது, மத்திய அரசுக்கும், திமுக அரசுக்கும் இடையேயும் முரண்பாடு நீடித்து வருகிறது. இதை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தார். அந்த காணொளியில், திமுகவையோ, திமுககாரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என்று தெரிவித்திருந்தார். இது திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில்தான், மதுரையில் ஒய்வு பெற்ற ஆவின் பணியார்கள் நலச்சங்க தலைவரும், ஆவின் திமுக தொழிற்சங்க கவுரவ தலைவருமான(எல்பிஎஃப்) மானகிரி கணேசன் என்பவர், தமிழக ஆளுநரை வரும் 27ம் தேதிக்குள் மாற்றாவிட்டால் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நகர் முழுவதும் போஸ்ட்டர் ஓட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அவர் அந்த போஸ்டரில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் : “தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர அரும்பாடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, ஒன்றிய அரசே உடனடியாக தமிழகத்தில் இருந்து வரும் 27ம் தேதிக்குள் ஆளுநரை மாற்ற வேண்டும். மாற்றாவிட்டாடல் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it