தி.மு.க. மூத்த தலைவர் கே.எஸ். ராதா கிருஷ்ணன். இவர், அண்மையில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் : நள்ளிரவு கலைஞர் கைது, ஸ்டாலின் வேளச்சேரி வீட்டில் midnight காவல் துறையின் அத்து மீறல், 2G சிக்கல் நேரத்தில் இல்லாத பதட்டம் இப்போது ஏன்? அந்த சமயங்களில் உடன் இருந்த கடுமையான நாட்களில் திமுகவில் பணி ஆற்றியவன். இதே செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் கடுமையாக ஊழல் குற்றம் சாட்டியது நாடு மறந்து விடவில்லை… இதன் தொடர்ச்சி எங்கு முடியுமோ? அ.தி.மு.க., ஆட்சியில், தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த முறை அமைச்சர் அலுவலகத்தில். முதல்வர் வெளிநாட்டில் இருந்தபோது ஏன் ரெய்டு என்று திமுகவினர் குழந்தை போல் அழுதனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ராதா கிருஷ்ணன் மீண்டும் தமிழக முதல்வரை சீண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடுள்ளார் : 90சதவீதம் அடைப்பு இருந்தும் இவ்ளோ நாள் ஆப்ரேசன் பண்ணாம இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.