லஞ்ச் பிறகுதான் மீட்டிங்… பிளைட்ல வந்து இங்குதான் லஞ்சே சாப்பிட்டேன் – முதல்வர்  விளக்கம்!

லஞ்ச் பிறகுதான் மீட்டிங்… பிளைட்ல வந்து இங்குதான் லஞ்சே சாப்பிட்டேன் – முதல்வர் விளக்கம்!

Share it if you like it

பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை முடித்து கொண்டு அவசரமாக தமிழகம் திரும்பிய தமிழக முதல்வரின் செயல் எதிர்க்கட்சிகளின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வண்ணம் எதிர்க்கட்சிகள் தற்போது ஒன்றிணைந்து உள்ளன. அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்றைய தினம் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனிடையே, கூட்டம் முடிந்த உடன் அவசர அவசரமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பி இருக்கிறார். இதையடுத்து, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறியிருக்கிறார் : அனைத்து கட்சி கூட்டத்திலிருந்து வெளியேறியதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. விமானத்திற்கு தாமதமாகிவிட்டது அதனால் தான் உடனே கிளம்ப வேண்டியது ஆகி விட்டது. நான் மதிய உணவை கூட நான் உண்ணவில்லை. இங்கே, வந்துதான் நான் சாப்பிட்டேன் என கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம் கிடைக்கும் என விளம்பரம் தேட பீகார் செல்ல முயன்ற விளம்பர முதல்வருக்கு இதுயெல்லாம் தேவையா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்: பீகாரில் நடந்த விவாதம்!

Share it if you like it