தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தாயை குடியாத்தம் குமரன் எனும் நபர் பழித்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரது, வருகைக்கு பின்பு பா.ஜ.க.வின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் முன்னேறி வருகிறது. இவரது, எளிமை, பணிவு, துணிச்சலான பேட்டி மாற்று கட்சியை சேர்ந்தவர்களை கூட வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதன்காரணமாக, மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்கள் கூட பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய பணிகளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனியொரு மனிதனாக செய்து வருகிறார். இவரது, அசுர வளர்ச்சி ஆளும் கட்சியை ஆட்டம் காண செய்து இருக்கிறது. தமிழக மக்களுக்கு அண்ணாமலையின் வருகை புதிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.
இதனை, எப்படியாவது தடுக்கும் வகையில், தி.மு.க.வினர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர் சிவாஜி கணேசன் என்பவன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்மையில் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெற்றோரை தி.மு.க. நிர்வாகி குடியாத்தம் குமரன் மிகவும் கீழ்த்தராமக பேசியிருக்கிறான். இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.