8 மணிநேரம் ஹிந்தியில் மீட்டிங்: எதிர்க்கட்சிகள் முதல்வரை அவமதித்து இருக்கிறது – மூத்த பத்திரிகையாளர் குற்றச்சாட்டு!

8 மணிநேரம் ஹிந்தியில் மீட்டிங்: எதிர்க்கட்சிகள் முதல்வரை அவமதித்து இருக்கிறது – மூத்த பத்திரிகையாளர் குற்றச்சாட்டு!

Share it if you like it

பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவமதித்து விட்டது என தமிழக மூத்த பத்திரிகையாளர் திடுக் தகவலை தெரிவித்துள்ளார்.

பாரதப் பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து இருக்கிறது. அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதல்வர் தலைமையில் அண்மையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதியிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டு திடீரென சென்னை திரும்பினார். முதல்வரின் இந்த செயல் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகம் நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமி ஆதன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஹிந்தி தெரியாத ஒரு முதல்வரை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் 8 மணிநேரம் கூட்டம் நடத்தி இருக்கின்றன. ஆங்கிலத்தில் பேசியிருந்தால் முதல்வருக்கு ஓரளவு புரிந்து இருக்கும். எதிர்க்கட்சிகள் தமிழக முதல்வருக்கு மரியாதை கொடுக்கவில்லை என மூத்த பத்திரிகையாளர் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it