பீகாரில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவமதிப்பு ஏற்பட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரணமாக இருக்க கூடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் அண்மையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றன. இந்த கூட்டத்தில், பா.ஜ.க. அல்லாத கட்சிகள் முதல்வர்கள், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமி ஆதன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார் : 8 மணி நேரம் பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று இருக்கிறது. அதுவும், ஹிந்தி தெரியாத ஒரு முதல்வரை வைத்துக்கொண்டு கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் என குற்றம் சாட்டியிருந்தார். இவரின், பேட்டிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கு உதயநிதி ஸ்டாலின்தான் காரணம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.