தி.மு.க.வைச் சேர்ந்த கழக கண்மணிகள் பல்வேறு அட்டூழியங்கள் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நல்லதை கூட பயத்துடன் செய்ய வேண்டியிருக்கு என முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
விடியல் தருவேன் என தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். இவர், முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, சட்டம் ஒழுங்கு தற்போது வரை பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கழக கண்மணிகள் பொதுமக்களுக்கு கொடுத்து வரும் தொல்லைகள் ஒருபுறம் இருக்க, கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இன்றுவரை தொடர்ந்து பல்வேறு அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர, எல்லாத்துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடி வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விடியல் அரசு மீது பல்வேறு ஊழல் புகார்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யின் கண்ட்ரோலில் இல்லை என்று கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியிருக்கிறார் : எதிர்க்கட்சியாக இருந்த போது கெட்டதை கூட தைரியமாக செய்தோம். ஆனால், நல்லதை கூட செய்ய பயமாக உள்ளது என்ற ரீதியில் பேசியிருந்தார். மேற்கூறிய சம்பவங்களை கழக கண்மணிகள் தொடர்ந்து செய்து வரும் நிலையில் முதல்வரின் இந்த பேச்சுதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது.