’அணில்’ தொல்லை: பெண் மீது மீட்டரை வீசிய மண்டை சூடான அதிகாரி!

’அணில்’ தொல்லை: பெண் மீது மீட்டரை வீசிய மண்டை சூடான அதிகாரி!

Share it if you like it

தொடர் மின்வெட்டு காரணமாக புகார் தெரிவிக்க வந்த பெண் மீது மின் மீட்டரை தூக்கி வீசிய அதிகாரியின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்தான, காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு பல்வேறு சங்கடங்களை பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில், முதன்மையானதாக இருப்பது தற்போது இருப்பது மின்வெட்டு. இதன் காரணமாக, மின்சாரத்தை மட்டுமே நம்பியுள்ள பல்வேறு சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. இதனிடையே, மின்வெட்டுக்கு காரணம் அணில்கள் தான் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு ஒருமுறை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூவை காட்டிலும் தி.மு.க. அமைச்சர் சிறந்த விஞ்ஞானி என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து இருந்தனர்.

இதையடுத்து, மின்துறை அமைச்சரின் நிர்வாக திறமையின்மையை மையப்படுத்தி மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது கற்பனை குதிரையை தட்டி விட்டு இருந்தனர். அந்த வகையில், நெட்டிசன்களில் தொடங்கி பொதுமக்கள் வரை அமைச்சரை அணில் பாலாஜி என்று அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் வினோஜி என்பவர் மின்வெட்டையும், அணிலையும் மேற்கோள்காட்டி வித்தியாசமான முறையில் தனது திருமண பத்திரிகையை வெளியிட்டு இருந்த சம்பவம் தமிழக மக்களிடையே கடும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

Image

இது ஒருபுறம் இருக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராம் நகரில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், தி.மு.க மாவட்ட கழகச் செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ் தலைமை தாங்கி இருந்தார். இக்கூட்டத்திற்கு, தேவையான மின்சாரம் அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து கள்ளத்தனமாக திருடப்பட்டு இருந்தன. தொடர் மின்வெட்டு காரணமாக அப்பகுதி மக்கள் கடும் இன்னலை அனுபவித்து வரும் நிலையில், தி.மு.க.வின் இந்த பொதுக்கூட்டம் அவசியமா? என்ற கேள்வியை பலர் எழுப்பி இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மனி ஒருவர் தங்கள் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு, உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க வந்துள்ளார். அப்போது, உதவி மின்பொறியாளர் அங்கு பணியில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, வணிக விற்பனையாளர் குப்புராஜிடம் மின்வெட்டு தொடர்பாக புகார் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, அந்த பெண்மணியின் உடன் வந்தவருக்கும் குப்புராஜ் விற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில், கடும் ஆத்திரமடைந்த குப்புராஜ் மின் மீட்டரை அவர் மீது கோபத்துடன் தூக்கி வீசி எறிந்து இருக்கிறார். இதனை, தனது செல்போனில் படம் பிடித்தவர்கள் அதனை இணையத்தில் பரவ விட்டு இருக்கின்றனர். இதையடுத்து, இக்காணொளி தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருக்கின்றன.

ம.பி. உ.பி. ஏ.பி. உள்ளிட்ட பா.ஜ.க. மாநிலங்கள் மற்றும் ஹிந்து உணர்வுகளை புண்படுத்துவது என்றால் பி.பி. வந்தது போல கதறும் தர்மபுரி எம்.பி. செந்தில் தற்போது எங்கே? ஒளிந்து கொண்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it