பதிவு எண் இல்லாமல் பவனி வரும் மேயர்!

பதிவு எண் இல்லாமல் பவனி வரும் மேயர்!

Share it if you like it

கோவை மாநகராட்சி மேயர் கடந்த ஒரு வாரமாக பதிவு எண் இல்லாமல் அரசு வாகனத்தை பயன்படுத்தி வருவதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றனர்.

ஆட்சி அதிகாரம் தம்மிடம் இருப்பதால் கழக கண்மணிகள், கழக முன்னோடிகள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இன்று வரை தங்களது விருப்படியே செயல்படுகின்றனர். இதன்காரணமாக, பொதுமக்கள் உட்பட பலர் தி.மு.க. அரசை மிக கடுமையாக சாடி வருகின்றனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சி மேயராக இருப்பவர் கல்பனா. இவருக்கு, மாநாகராட்சியின் சார்பில் அண்மையில் புதிய இன்னோவா கார் வாங்கப்பட்டது. இந்த வாகனத்தை தான் தற்போது மேயர் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில், பதிவு எண் கூட வராத நிலையில் கடந்த ஒரு வாரமாக அரசு வாகனத்தை மேயர் பயன்படுத்தி வருவது தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பதிவு எண் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம் என்கிற நிலை இருக்கும் போது மக்கள் பிரதிநிதியான மேயரே சட்டத்தை மீறுவது சரியா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.


Share it if you like it