மின் கட்டணம் விர்…ர்: மக்களுக்கு டர்…ர்!

மின் கட்டணம் விர்…ர்: மக்களுக்கு டர்…ர்!

Share it if you like it

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதற்கு ஏழை, எளியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வை மிக கடுமையாக சாடி வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சியில், தமிழக மக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனே நிறைவேற்றப்படும். ஆகவே, எங்களுக்கு வாக்களியுங்கள், என கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, விடியல் கிடைக்கும் என நம்பிய மக்களுக்கு கிடைத்தது என்னவோ திருட்டு, இருட்டு, மிரட்டு தவிர வேறு ஒன்றுமில்லை என்பதே நிதர்சனம். மேலும், பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, என அடுக்கடுக்காக கட்டணங்களை உயர்த்தி விடியல் அரசு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ஸ்டாலின் அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. இன்று முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது. அந்த வகையில், 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடரும் கூடுதலாக நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகையின் விவரம் இதோ.

101 – 200 யூனிட் – ரூ. 27.50
201 – 300 யூனிட் – ரூ. 72.50
301 – 400 யூனிட் – ரூ. 147.50
401 – 500 யூனிட் – ரூ. 297.50

501 – 600யூனிட் – ரூ. 155
601 – 700யூனிட் – ரூ. 275
701 – 800 யூனிட் – ரூ. 395
801- 900 யூனிட் – ரூ. 565


Share it if you like it