இறந்தவர்களும் இனி தப்ப முடியாது: இதுதான் விடியல் அரசா?

இறந்தவர்களும் இனி தப்ப முடியாது: இதுதான் விடியல் அரசா?

Share it if you like it

மின் மயான கட்டணங்களை தி.மு.க. அரசு திடீரென உயர்த்தி இருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐனவரி, பிப்ரவரி, டெலிவரி மற்றும் Mortuary தவிர்த்து தமிழக மக்கள் மீது பல்வேறு வரிகளை விடியல் அரசு திணித்து வருகிறது. இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். விடியல் கிடைக்கும் என நம்பிய மக்கள் இரவில், அணிலுடனும் பகலில் கழக கண்மணிகளோடும் போராடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல் படி இம்மாதம், 10 – ஆம் தேதி முதல் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உடல் அடக்கம் செய்யப்படும் மின் மயானங்களுக்கான மின் கட்டணம் யூனிட்டிற்கு, 7 ரூபாயாகவும், டிமாண்ட் சார்ஜ் கிலோ வாட்டிற்கு மாதம் 550 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், மின் மயானங்களை பராமரித்து வருவோர், மின் கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்க, உடல் தகனம் செய்ய வரும் உறவினர்களிடம் இருந்து கூடுதல் கட்டணங்களை வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மின் மயானம் மற்றும் கல்லறை தோட்டங்களுக்கான மின் கட்டணத்தை தி.மு.க. அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

EB bill, TNEB, E cemetery, மின் மயானம்,  மின் வாரியம், மின் கட்டணம் , Chennai, Electricity Board, Electricity Bill, சென்னை,


Share it if you like it