வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வனவேங்கைகள் கட்சியின் தலைவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இழிவுப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், பட்டியல் சமூகத்தை சேரந்தவர்கள் இன்று நீதிபதியாக இருக்கிறார்கள் என்றால் அது திராவிடம் போட்ட பிச்சை என தி.மு.க.வின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி பேசியிருந்தார். இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மணம் பூண்டியில் நியாய விலை கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சரர் பொன்முடி, ஆண் பெண் சமம். இந்த, ஊரில் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஒரு பெண். இவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த, ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார் என்றால் அதுதான் தி.மு.க.வின் சாதனை. நீங்க, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் தானே என்று அந்த பெண்மணியிடமே அமைச்சர் கேட்ட சம்பவம் தான் கொடுமையிலும் கொடுமை.
இதையடுத்து, தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்களைப் போல நடத்தினார் என்று செய்தியாளர்களிடம் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து, ஜாதிய வன்மத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்தி இருந்தார். இப்படி, தி.மு.க. தலைவர்கள் பலரும் பட்டியல் சமூகத்தினரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.யும், வன வேங்கை கட்சியின் தலைவர் இரணியனும் கூட்டாக சென்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சமீபத்தில் அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கின்றனர். அப்போது, வன வேங்கை கட்சி நிர்வாகிகளையும், தனுஷ்குமார் எம்.பி.யையும் நிற்க வைத்தே அமைச்சர் பேசி இருக்கிறார். வீட்டிற்கு, வந்தவர்களிடம் தீண்டாமையை கடைப்பிடித்த அமைச்சரின் செயலுக்கு பொதுமக்கள் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், வன வேங்கை கட்சியின் தலைவர் இரணியன், வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.