சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை உறுதி: முதல்வர் எச்சரிக்கை கடிதம்!

சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை உறுதி: முதல்வர் எச்சரிக்கை கடிதம்!

Share it if you like it

தி.மு.க. அமைச்சர்களின் செயல்பாடுகளால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி இருக்கும் கடிதம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஸ்டாலின் இருந்து வருகிறார். இவர், பொறுப்புக்கு வந்தபின்பு தி.மு.க. கவுன்சிலர்களில் தொடங்கி எம்.பி., எல்.எல்.ஏ. வரை யாரும் முதல்வரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இதன்காரணமாக, ஸ்டாலின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை கொடூங்கையூரில் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவி என்பவர் தனது சொந்த நிலத்தில் வீடு கட்டி இருக்கிறார். மேற்கொண்டு, வீடு கட்ட வேண்டும் என்றால், தனக்கு 10 லட்ச ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என, தி.மு.க.வின் 34-வது வார்டு பெண் கவுன்சிலர் சர்மிளா காந்தியின் கணவர் தனது அடியாட்களுடன் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா தனது படைபலத்துடன் தொழிற்சாலை ஒன்றிற்குள் புகுந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களை மிரட்டிய சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி இவ்வாறு பேசினார் ; உங்களுக்கு எல்லாம் ரூ. 4,000 ஆயிரம் கொடுத்தது யாரு வாய் திறந்து சொல்லுங்க. இப்ப, நீங்க எப்படி பஸ்ஸில் வருகிறீர்கள். இங்கிருந்து, கோயம்பேடு போனாலும் எங்கே? போனாலும் ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என தமிழக பெண்களை அமைச்சர் பொன்முடி இழிவுபடுத்தினார்.

இதையடுத்து, தி.மு.க.வின் மூத்த தலைவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், எங்களுக்கு தர்றதா சொன்ன 1,000 ரூபாய் எங்கேன்னு கேட்குறீங்களா? இப்பத்தான் சில்லரை மாத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் 1,000 ரூபாய் வழங்குவோம். உனக்கு 1,000 ரூபாய், ங்கொம்மாளுக்கு 1,000 ரூபாய் என நக்கலாக பேசியிருந்தார்.

இப்படியாக, தி.மு.க.வின் கவுன்சிலர்களில் தொடங்கி எம்.எல்.ஏ., அமைச்சர் வரை தமிழக மக்களை தொடர்ந்து புண்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், தமிழக முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.வினருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;

எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடமால் செயலாற்றுங்கள். நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன்.

நீதிமன்றத்திடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாமனிதர் செந்தில் பாலாஜிக்கு முக்கிய அமைச்சர் பதவியை வழங்கி விட்டு, தி.மு.க.வினருக்கு கடிதம் எழுதுவது சரியா? அதுமுறையா? தலைவன் எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழி.. இதுவே, தமிழகத்தின் தலைவிதி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it