தமிழகத்தில் மீண்டும் ஒரு சட்டமன்றம் கட்டும் பணி நடக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகீர் தகவலை கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு மக்களின் வரிப்பணம் பலவகையிலும் வீணடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00, 000-க்கும் மேல் கடன் உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் வெள்ளையறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் என தி.மு.க அடுக்கடுக்கான வெட்டி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன. இப்படியான, ஆலோசனைகளை வழங்க தான் தமிழக முதல்வருக்கு 5 பொருளாதார நிபுணர்கள் நியமனம் செய்யப்பட்டார்களா? என்று பொதுமக்கள் உட்பட பலர் கடும் விமர்சனம் செய்து இருந்தனர்.
உத்தரபிரதேசத்தில் 23 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் வெறும் 8 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என பிரபல அரசியல் விமர்சகர் அக்கினிஸ்வரன் அண்மையில் பகீர் தகவலை தமிழக மக்களிடம் கூறியிருந்தார். பயனற்ற திட்டங்களுக்காக தமிழக அரசு மக்கள் வரிபணத்தை வீணடித்து வருகிறது என்பதே நிதர்சனம். இதேநிலை, நீடித்தால் தமிழகம் வெகுவிரைவில் இலங்கை போல மாறிவிடும் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் தமிழக அரசிற்கு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்பு திடுக்கிடும் தகவலை தெரிவித்து இருந்தார். இதனிடையே, சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்ப் பலகைகள் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்ய வேண்டி ரூ. 8.43 கோடி பணம் சென்னை மாநகராட்சியின் சார்பில் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்ட் இருந்தது. மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவே இந்த பட்ஜெட் ஒதுக்கீடு என அந்நாட்களில் நெட்டிசன்கள் தி.மு.க.வை வறுத்தெடுத்து இருந்தனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகீர் தகவல் ஒன்றினை கூறியுள்ளார்;
தி.மு.க.வின் 6 அமைச்சர்கள் மகாபலிபுரத்தில் 100 ஏக்கருக்கும் மேல் உள்ள சொத்தை பினாமியின் பெயரில் வாங்கியுள்ளனர். இதுதவிர, 6,000 ஏக்கரில் புதிய சட்டமன்றத்தை மகாபலிபுரம் அருகில் அமைப்பதற்கான அறிவிப்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். தமிழக மக்களை முட்டாளாக்கி பணம் சம்பாரிப்பதற்கு விஞ்ஞான ஊழல் அடிப்படையில் தி.மு.க அரசு செயல்பட இருக்கிறது. எப்படி தமிழகத்தில் லூலூ குரூப்பின் ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்க மாட்டோமோ அதே போல, தமிழக மக்களுடன் பா.ஜ.க இணைந்து புதிய சட்டமன்றத்தை கட்ட அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஈ.சி. ஆர் சாலையின் பெயரை முத்தமிழ் அறிஞர் கருணாநிதி சாலை என தமிழக முதல்வர் ஸ்டாலின் என அண்மையில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.