காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட சிப்காட் திட்ட அலுவலகத்தில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், ஆட்சியில் மக்கள் நலப்பணி திட்டங்கள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக, பொதுமக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விடியல் கிடைக்கும் என்று நம்பிய மக்கள் தற்போது இருளில் தள்ளப்பட்டு இருக்கின்றனர். அதனை உறுதிப்படுத்தும், பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே கழிவறைகள் கட்டப்பட்டன. இதில், நகைச்சுவை சம்பவம் என்னவெனில், ஓரே கழிவறையை இருவர் பயன்படுத்துவது போன்று அது வடிமைக்கப்பட்டதுதான். இந்த, கழிவறைக்கு கதவுகளும் தண்ணீரும் இல்லை என்பது தான் கூடுதல் தகவல்.
இச்சம்பவத்தின், தாக்கம் குறைவதற்குள், மற்றொரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கத்தில், தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற் பூங்காவின் திட்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளன. இதன், மதிப்பு 1 கோடியே 80 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிலையில், புதிதாக திறந்து வைக்கப்பட்ட இந்த அலுவலகத்தில், ஒரே அறையில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.