அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் மூன்றே நாளில் இடிந்து விழுந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்த பின்பு பள்ளி மற்றும் கல்லூரி தொடர்பான செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிதான் ’டவுன் சாப்டர்’ மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியின், கழிவறை சுற்று சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில், 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த சம்பவம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. மாணவர்களின் உயிர் இழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்த சம்பவத்தின் தாக்கம் குறையாத பட்சத்தில், அதேபோன்ற சம்பவம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்ட வசமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை. இதுகுறித்து, விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் கொடுப்பைக்குழியில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், சுற்றுச்சுவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டது. இப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே, வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி இந்த சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட மூன்றே நாளில், அப்பள்ளியின் 200 மீட்டர் சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் விழுந்துள்ளது. தரமற்ற மணல் மற்றும் சிமெண்ட் காரணமாகவே இந்த சுவர் இடிந்து விழ காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், விவரங்களுக்கு பாலிமர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சுற்ற