தீபாவளியை முன்னிட்டு அரசுத்துறைகள் எவ்வாறு எல்லாம் டார்கெட் நிர்ணயம் செய்து மக்களிடம் பணம் வசூல் செய்ய இருக்கிறது என்பதை இணையதளவாசிகள் நகைச்சுவையான முறையில் கிண்டல் செய்து இருக்கின்றனர்.
பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என விடியல் அரசு தமிழக மக்களை தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழகம் எங்கும் அனைத்து அரசுத்துறைகளிலும் லஞ்சம் லாவண்யம் புறையோடி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். மேலும், மக்கள் நலத்திட்ட பணிகள் பெரும் தோய்வை சந்தித்து இருக்கின்றன. இப்படியாக, விடியாத ஆட்சியை விடியல் அரசு வழங்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசுத்துறைகளும் எவ்வளவு பணம் வசூல் செய்ய இருக்கிறது. அதாவது, டார்கெட் நிர்ணயம் செய்து இருக்கிறது என்பதை நகைச்சுவையான முறையில் அதேவேளையில் உண்மையை நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டும் விதமாக இக்காணொளி அமைந்து இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.