ஹிந்தி மொழி வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக ஊடகங்கள் கருத்து கணிப்பு நடத்த தயாரா? என தமிழக ராணுவ வீரர் கேள்வி எழுப்பிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சி அமைந்து 16 மாதங்கள் நிறைவு பெற்று இருக்கிறது. ஆனால், மக்கள் விரும்பும் ஆட்சியாக இது அமையவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு என சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நிகழும் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்டாலின் அரசின் மீது தமிழக மக்களுக்கு தற்போது கடும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. இதனை திசை திருப்பும் முயற்சியாக தி.மு.க. கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் தான் ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டம். அறிவார்ந்த தமிழக மக்கள் தி.மு.க.வின் உண்மையான சுயரூபத்தை நன்கு உணர்ந்து உள்ளனர் என்பதே நிதர்சனம். இப்படிப்பட்ட சூழலில் தான், தமிழக ராணுவ வீரர் ஒருவர், ஹிந்தி மொழிக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக சரமாரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அக்காணொளியில் அவர் கூறியதாவது ;
தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிப்பதாக சிலர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். யாரும் ஹிந்தி மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று உங்களது குழந்தைகளின் கையை பிடித்து கொண்டு செல்லவில்லை. ஹிந்தி படிக்கணுமா அல்லது வேண்டாமா என்று ஒவ்வொரு வீட்டிலும் கருத்து கணிப்பு எடுக்க எந்த ஒரு ஊடகத்திற்கும் தைரியம் இருக்கிறதா? தமிழ்நாட்டில் நடப்பது மது திணிப்பு. எந்த குடும்பமாவது எனது மகன் குடிக்க வேண்டும், எனது கணவர் குடிக்க வேண்டும் என்று யாராவது கேட்டார்களா? கேட்காத சாராயத்தை மக்கள் மீது நீங்கள் தான் திணிக்கிறீர்கள். ஹிந்தி படிச்சா தப்பு குடிச்சா தப்பு இல்லையா என்று ஆவேசமாக அவர் பேசியிருக்கிறார். இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.