தி.மு.க. மீது இஸ்லாமிய அமைப்புகள் குற்றச்சாட்டு!

தி.மு.க. மீது இஸ்லாமிய அமைப்புகள் குற்றச்சாட்டு!

Share it if you like it

கோவையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக உளவுத்துறை தோல்வியை தழுவி விட்டது என ஐக்கிய ஐமாத் அமைப்புகள் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 23-ம் தேதி அதிகாலை சென்ற கார், சிலிண்டர் வெடித்ததால் சுக்கு நுாறாக நொறுங்கியது. இச்சம்பவத்தில், காரில் சென்ற உக்கடம் கோட்டைமேட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜமேஷா முபீன் என்பவர் பலியானார்.
காரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து என்று போலீஸார் கருதினர். ஆனால், தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வில் ஏராளமான ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இச்சம்பவத்தை, வைத்து பார்க்கும் போது இது சிலிண்டரால் நிகழ்ந்த விபத்து அல்ல என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இப்பொருட்கள் வெடி குண்டுகள் தயாரிக்கவும், அதிக சேதத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுபவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தன.

இச்சம்பவத்தை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக உளவுத்துறையின் படுதோல்வியை இது காட்டுகிறது என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில், கோவை மாவட்ட ஐக்கிய ஐமாத் பொதுச் செயலாளர் அப்துல் ஜாஃபார் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ;

கடந்த 23 – ஆம் தேதி கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த ஒரு அசாதாரண செயல் நடைபெற்றது. அதனை சிலிண்டர் வெடிப்பு என்று கூறினார்கள். அது தொடர்பாக, மாநகர காவல் ஆணையாளரை சந்திக்க வந்தோம். எங்களை பொறுத்த வரை இது தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்கான முயற்சி தான். கடவுள் கோவை மாவட்ட மக்களை காப்பாற்றி இருக்கிறார். தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடவுள் தண்டனையை வழங்கியுள்ளார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் இன்றும் கோவையில் தான் இருக்கிறார்கள். அவர்களை, எல்லாம் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும். காவல்துறை எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஐக்கிய ஐமாத் முழுமையான ஒத்துழைப்பை நல்கும். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, உளவுத்துறையின் தோல்வியை இது காட்டுகிறது. உளவுத்துறை சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதே எங்களது ஆதங்கம் என குறிப்பிட்டு இருக்கிறார்.


Share it if you like it