பா.ஜ.க. மற்றும் என்.ஐ.ஏ. இணைந்து முபீனுக்கு பயிற்சி அளித்து பயங்கரவாத செயலை செய்ய சொன்னார்கள் என்ற விமர்சனம் வருகிறது என தமிழக சபாநாயகர் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 23-ம் தேதி அதிகாலை சென்ற கார், சிலிண்டர் வெடித்ததால் சுக்கு நுாறாக நொறுங்கியது. இச்சம்பவத்தில், காரில் சென்ற உக்கடம் கோட்டைமேட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜமேஷா முபீன் என்பவர் பலியானார்.
காரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து என்று போலீஸார் கருதியது. ஆனால், தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வில் ஏராளமான ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் கிடைத்ததால், போலீஸார் சந்தேகம் அடைந்தனர். காரணம், என்னவென்றால் இப்பொருட்கள் வெடி குண்டுகள் தயாரிக்கவும், அதிக சேதத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுபவை என்று உறுதி செய்யப்பட்டது. இந்த, கார் வெடிப்பு சம்பவம் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடந்த சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது. தமிழக மக்களிடம், இச்சம்பவத்தின் தாக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், நெல்லை மாவட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு இவ்வாறு கூறியிருக்கிறார் ; பா.ஜ.க. மற்றும் என்.ஐ.ஏ. இணைந்து முபீனுக்கு பயிற்சி அளித்து பயங்கரவாத செயலை செய்ய சொன்னார்கள் என்ற விமர்சனம் வருகிறது. எப்படியோ, இந்த சம்பவத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கடவுளுக்கும், அரசிற்கும் நன்றி சொல்ல வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சபாநாயகர், இப்படி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குறியது என்பதே பலரின் கருத்து.