கோவை குண்டு வெடிப்பில் இறந்த பயங்கரவாதிக்கு முட்டு கொடுக்கும் விதமாக தி.மு.க. மூத்த தலைவர் கார்த்திகேய சேனாதிபதி பேசியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை சென்ற கார் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில், காரில் சென்ற உக்கடம் கோட்டைமேட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று காவல்துறையினர் கருதினர். ஆனால், தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வில் ஏராளமான ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் கிடைத்தன. இதையடுத்து, இப்பொருட்கள் வெடி குண்டுகள் தயாரிக்கவும், அதிக சேதத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுபவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த, கார் வெடிப்பு சம்பவம் ஹிந்து பண்டிகையான தீபாவளியை சீர்குலைக்க நடந்த முயற்சியாக இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இச்சம்பவம், தமிழகத்தையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு, பா.ஜ.க. மற்றும் என்.ஐ.ஏ. இணைந்து முபீனுக்கு பயிற்சி அளித்து பயங்கரவாத செயலை செய்ய சொன்னார்கள் என்ற விமர்சனம் வருகிறது. எப்படியோ, இந்த சம்பவத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கடவுளுக்கும், அரசிற்கும் நன்றி சொல்ல வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சபாநாயகர், இப்படி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது சரியா? என பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
கோவை சம்பவத்தின் தாக்கம் இன்று வரை தமிழக மக்களிடையே பேசுப்பொருளாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆதன் இணையதள ஊடகத்திற்கு காணொளி வாயிலாக பேட்டியளித்தார். அந்த பேட்டியில், முழுக்க முழுக்க தீவிரவாதி முபீனுக்கு ஆதரவு கரம் நீட்டுவது போல அவரது பதில் அமைந்து இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
