சென்னை பேக்கேஜ் டோட்டல் டேமேஜ்… மேயரை தேடும் பொதுமக்கள்!

சென்னை பேக்கேஜ் டோட்டல் டேமேஜ்… மேயரை தேடும் பொதுமக்கள்!

Share it if you like it

மழைநீர் வடிகால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்று சென்னை மேயர் பிரியா ராஜன் அண்மையில் கூறியிருந்தார். இதனிடையே, சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, ஏழை எளியவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் மழை நீர் முழுமையாக வடியாத காரணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி. பா.ஜ.க. மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆங்காங்கே, மழை நீர் தேங்கி இருப்பதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதன்காரணமாக, உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு மக்கள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனிடையே, தி.மு.க.வின் ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் கழக கண்மணிகள் மழை வெள்ளத்தால் தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது போல ஆஹா ஓஹோ என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் பலத்த மழை பெய்தது. அப்போது, மழைநீரால் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட சென்ற போது, எங்களுக்கு சோறு வேண்டாம். நிரந்தர தீர்வு தான் வேண்டும் என பெண்மணி ஒருவர் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதேபோல, ஐயா விடியல் தருகிறோம் என்று கூறினீர்களே இதுதான் விடியலா? என ஸ்டாலினின் முகத்திற்கு நேராகவே ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

கடந்த ஆண்டு பெய்த மழையால் மக்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இதனை, ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டு, இந்நேரம் துரித கதியில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தால் இன்று சென்னையில் பெய்து வரும் மழையால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. சென்னையில், மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளது என்று மேயர் பிரியா ராஜன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image
Image

Share it if you like it