நெஞ்சை பதற வைக்கும் காட்சி: பாதாள சாக்கடையில் விழுந்த பெண்!

நெஞ்சை பதற வைக்கும் காட்சி: பாதாள சாக்கடையில் விழுந்த பெண்!

Share it if you like it

மழை நீரில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவர் பாதாள சாக்கடையில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஒன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த ஆட்சியில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதன்காரணமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை இன்று வரை அனுபவித்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு, வாய்ப்பு இருப்பதால் தமிழ்நாட்டில் (ஆரஞ்ச் அலர்ட் ) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில், தொடர்ந்து 3 நாட்களாக விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் நீச்சல் குளம் போல மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

மழை நீர் தேங்கும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மீண்டும் அங்கு மழை நீர் தேங்காத வண்ணம் பல்வேறு நவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 95% சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளது என்று சென்னை மேயர் பிரியா ராஜன் கூறியிருந்தார். ஆனால், சென்னையில் பெய்து வரும் மழைநீர் முழுமையாக வெறியேறாமல் ஆங்காங்கே தேங்கி இருப்பதன் மூலம் தி.மு.க.வின் சாயம் தற்போது வெளுக்க துவங்கிவிட்டது.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை பெரம்பூர் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, பாரக்ஸ் சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடையை கவனிக்காமல் அதில் அவர் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள், அப்பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு நியூஸ் 18 லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it