நடிகைகள் மற்றும் பா.ஜ.க. பெண் நிர்வாகிகளை இழிவுப்படுத்திய நபரை திரைத்துறையை சேர்ந்தவர்கள் இதுவரை ஏன்? கண்டிக்கவில்லை என பிரபல அரசியல் விமர்சகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பேசிய தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர், நடிகைகளும், பா.ஜ.க. நிர்வாகிகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரின் பெயர்களை சொல்லி, நாலுமே ஐடங்கள் என்று அவதூறாகப் பேசியதோடு, குஷ்புவை தி.மு.க. நிர்வாகி ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமாக பேசியிருந்தார்.
தி.மு.க. ஆபாச பேச்சாளரின் கருத்து தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பெண் உரிமை, பெண் விடுதலை மற்றும் சம உரிமை என்று கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் மேடைதோறும் பேசி வருகின்றனர். ஆனால், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பெண்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை வழங்கி வருகின்றனர் என்பதற்கு சைதை சாதிக்கின் இழிவான பேச்சே சிறந்த உதாரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இதனிடையே, நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வு, விவசாய சட்டம், புதிய கல்விக்கொள்கை, என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டங்களை, தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தி.மு.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு, நடிகர் கமலஹாசன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் பா.ஜ.க. தொழிற் பிரிவு துணை தலைவருமான செல்வகுமார், தனது உள்ள குமுறலை இவ்வாறு வெளிப்படுத்தி இருக்கிறார் ; நான்கு தமிழ் நடிகைகளை, தி.மு.க.வின் ஆபாச பேச்சாளர் சைதை சாதிக் என்பவன் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருக்கிறான். ஒரு திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூட இதனை கண்டிக்கவில்லை. இது குறித்து ஏன்? உதயநிதியிடம் புகார் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த திட்டதிற்கு கருத்து கூறியவர்கள் இப்போது ஏன்? வாய் மூடி மெளனியாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லாம் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறார்களா என்று காட்டமான முறையில் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.