தமிழகத்தில், கடந்த மூன்று நாட்களில் 708.29 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டு இருக்கும் சம்பவத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழியை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை உடனே மூடுவோம் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து, தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும் இதே கருத்தை கடந்த சட்டமன்ற தேர்தலில் கூறியிருந்தனர். இவர்களின், வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் அக்கட்சியை அரியணையில் அமர்த்தினர். இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வராக, ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 16 மாதங்களை, இந்த விடியல் அரசு நிறைவு செய்துள்ளது. இருப்பினும், பூரண மதுவிலக்கு சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதே நிதர்சனம்.
இதனிடையே, தமிழகத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் மது பழக்கத்திற்கு அடிமையாகும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தீபாவளி பண்டிகை தினமான நேற்று மட்டும் தமிழ்நாட்டில் மொத்தமாக ரூ. 244.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 708.29 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விடியா அரசின் அவல ஆட்சியில் தமிழகம் குடிகாரர்களின் மாநிலமாக மாறி வருகிறது. இதுதான், திராவிட மாடல் ஆட்சியா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பூரண மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று கூறிய கனிமொழி மற்றும் உதயநிதி இதுகுறித்து வாய் திறப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.